15 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக 26 வயது ஆசிரியை கைது!

உத்தரப் பிரதேசத்தில் 15 வயது பள்ளி மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக 26 வயது ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவனை ஆசிரியை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவன் திடீரென காணாமல் போனதால் சந்தேகமடைந்த அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில், ஹோட்டல் ஒன்றில் ஆசிரியையுடன் மாணவன் தங்கியிருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார் மாணவனை பாதுகாப்பாக மீட்டதுடன், 26 வயது ஆசிரியையையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிறுவனுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகக்கூடும் என்பதை சுட்டிக்காட்டி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)