9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை!

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு உதவும் வகையில் ஆண்டுக்கு ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளமான https://scholarships.gov.in/ வாயிலாக நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)