ஹியூமனாய்டு ரோபோ சந்தையில் களமிறங்கும் சாம்சங் CES 2027-ல் அறிமுகம்!

ஹியூமனாய்டு ரோபோ தயாரிப்பில் டெஸ்லா, யூனிட்ரீ மற்றும் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள CES 2027 தொழில்நுட்ப கண்காட்சியில் தனது முதல் நவீன மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனிதர்களைப் போல செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த ரோபோ, மிக நுணுக்கமான மற்றும் சிறிய பொருட்களைக்கூட சேதமின்றி கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. தொழிற்சாலை பணிகளில் துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செயல்படக்கூடிய வகையில் இதன் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக சாம்சங் நிறுவனத்தின் சொந்த தொழிற்சாலைகளில் இந்த ஹியூமனாய்டு ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்தியில் ரோபோ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்தும் இந்த முயற்சி, எதிர்காலத்தில் மனிதர்களுடன் இணைந்து இயந்திரங்கள் பணியாற்றும் புதிய சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)