விமானங்களுக்கு A-check முதல் D-check வரை பராமரிப்பு.. செலவு ரூ.20 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை!

கார் மற்றும் இருசக்கர வாகனங்களைப் போலவே விமானங்களும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் விரிவான பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. விமானங்களின் செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் முக்கிய பாகங்களின் தரத்தை உறுதி செய்யும் இந்த பராமரிப்புகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
விமான பராமரிப்புப் பணிகள் பொதுவாக A-check, C-check மற்றும் D-check என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சோதனையும் வெவ்வேறு அளவிலான ஆய்வு மற்றும் பராமரிப்புப் பணிகளை உள்ளடக்கியது. இதில் விமானத்தின் என்ஜின், தரையிறங்கும் கருவிகள், முக்கிய இயந்திர பாகங்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் பழுதுபார்ப்பு அல்லது பாகங்கள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பராமரிப்புப் பணிகளுக்கான செலவு விமானத்தின் வகை, மேற்கொள்ளப்படும் ஆய்வின் தன்மை மற்றும் மாற்றப்படும் உதிரிபாகங்களைப் பொறுத்து மாறுபடும். சிறிய அளவிலான பராமரிப்புக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவாகும் நிலையில், விரிவான பராமரிப்புப் பணிகளுக்கு ரூ.20 கோடி வரை செலவாகலாம்.
இந்தியாவில் விமானங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பிரத்யேக MRO (Maintenance, Repair and Overhaul) மையங்கள் மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. விமானங்களின் பாதுகாப்பு மற்றும் தொடர்ந்து இயக்குவதற்கான தகுதியை உறுதி செய்வதில் இந்த மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.




கருத்துகள் (0)