ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நீலகிரியில் போதை காளான் வீடியோ சர்ச்சை இளைஞர்கள் தேடிச் செல்வதால் விசாரணை கோரிக்கை!

நீலகிரியில் போதை காளான் வீடியோ சர்ச்சை இளைஞர்கள் தேடிச் செல்வதால் விசாரணை கோரிக்கை!

நீலகிரி வனப்பகுதிகளில் போதை தரும் மேஜிக் காளான்கள் இருப்பதாக கோவையைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் காளான்களைத் தேடி இளைஞர்கள் செல்வதாகக் கூறப்படுகிறது.

 

இதனால், காளான்கள் கிடைக்கும் இடங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இளைஞர்களை வனப்பகுதிகளுக்கு ஈர்க்கும் வகையில் வீடியோ வெளியிட்ட நபர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும், இத்தகைய காளான்களை உட்கொள்வது உடலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், மாரடைப்பு உள்ளிட்ட ஆபத்துகளையும் உருவாக்கி உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கின்றனர். வனப்பகுதிகளில் தேவையற்ற மனித நடமாட்டம் அதிகரிப்பதால் இயற்கைச் சூழல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.