திமுக – பாஜக கூட்டணி அமையுமா? முருகப்பெருமான் கையில் தான் உள்ளது என நயினார் நாகேந்திரன் கருத்து!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்தது நாட்டுக்கு நல்ல முடிவு என தெரிவித்தார்.
மேலும், திமுக – பாஜக இடையே எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “திமுக – பாஜக கூட்டணி அமைவது முருகப்பெருமானின் கையில் உள்ளது” என கூறினார். அவரது இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.




கருத்துகள் (0)