ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
உலகம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 5.0 ரிக்டர் நிலநடுக்கம் ஜன்னல்கள் உடைந்து சேதம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 5.0 ரிக்டர் நிலநடுக்கம் ஜன்னல்கள் உடைந்து சேதம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள மன்ஹாட்டன் கடற்கரைக்கு அருகே கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் வெளியேறினர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.