அரவக்குறிச்சி அருகே கோர விபத்து.. ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சபரிமலைக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் கார், லாரி மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மணிகண்டன், கோவிந்தன், பழனிவேல் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காரில் பயணித்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதியினர் மற்றும் மீட்புப் படையினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை யாத்திரை முடித்து ஊர் திரும்பிய பக்தர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)