சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
உலகம்

WWE நட்சத்திரம் பிரான்சன் ரீட் 38 வயதில் மரணம்!

WWE நட்சத்திரம் பிரான்சன் ரீட் 38 வயதில் மரணம்!

WWE ரசிகர்களிடையே பிரான்சன் ரீட் என்ற பெயரில் பிரபலமான ஆஸ்திரேலிய மல்யுத்த வீரர் ஜெர்மைன் ஹேலி தனது 38 வயதில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுச் செய்தியை WWE நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மருத்துவச் சிக்கல்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற WWE Crown Jewel போட்டியில் பங்கேற்றபோது அவருக்குக் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்தப் போட்டிக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில், அவரது உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் மல்யுத்த உலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், Crown Jewel போட்டியில் ஏற்பட்ட காயங்களுக்கும் அவரது மரணத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக WWE நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.