சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
அரசியல்

BREAKING: தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் மீது FIR பதிவு!

BREAKING: தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் மீது FIR பதிவு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ அருள்விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறை அளித்த தகவல் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.