ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

இட்லி தட்டில் சிக்கிய சிறுமியின் விரல் நவீன கருவிகள் மூலம் மீட்பு!

இட்லி தட்டில் சிக்கிய சிறுமியின் விரல் நவீன கருவிகள் மூலம் மீட்பு!

வேலூரில் இட்லி தட்டில் சிக்கிக்கொண்ட சிறுமியின் விரலை தீயணைப்புத் துறையினர் நவீன கருவிகளின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

 

மெர்சி என்ற சிறுமியின் விரல் இட்லி தட்டில் சிக்கியதால், வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து பெற்றோர் சிறுமியை வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் முயற்சி செய்தும் விரலை வெளியே எடுக்க முடியவில்லை.

 

இதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அலுவலர் கார்ல் மார்க்ஸ் தலைமையில் மருத்துவமனைக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நவீன கருவிகளைப் பயன்படுத்தி இட்லி தட்டை கவனமாக வெட்டி அகற்றினர். இதன் மூலம் சிறுமியின் விரல் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக மீட்கப்பட்டது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.