பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து இயக்குநர் லிஜு கிருஷ்ணா விடுதலை!

‘டாக்ஸிக்’ பட இயக்குநர் கீது மோகன்தாஸ் மீது தொடரப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கில், இயக்குநர் லிஜு கிருஷ்ணாவை எர்ணாகுளம் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.
தனக்கு எதிராக கீது மோகன்தாஸ் தொடர்ந்த வழக்கு திட்டமிட்டு புனையப்பட்டது என லிஜு கிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார். ‘படவெட்டு’ திரைப்படம் தொடர்பான படைப்புச் சார்ந்த விவாதங்களின்போது ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து மோதல்களே இந்த விவகாரத்திற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கீது மோகன்தாஸின் அகங்காரத்தால் தன் மீது வழக்குகள் தொடரப்பட்டதாகவும், ‘படவெட்டு’ திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்கவும் அவர் முயற்சி செய்ததாகவும் லிஜு கிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார்.




கருத்துகள் (0)