சபரிமலை பக்தர்களுக்காக சார்லப்பள்ளி – கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் பயண வசதியை கருத்தில் கொண்டு, தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி மற்றும் கேரளாவின் கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சார்லப்பள்ளியில் இருந்து கொல்லம் நோக்கி வரும் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பூர் ரயில் நிலையத்தை இரவு 10.03 மணிக்கு வந்தடையும்.
அதேபோல், கொல்லத்தில் இருந்து சார்லப்பள்ளி நோக்கி செல்லும் சிறப்பு ரயில்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலை சீசனில் பக்தர்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)