தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கக் கூடாது என கி.வீரமணி வலியுறுத்தல்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளிக்கும் உறுதிமொழிகளை நம்பி திமுக ஆதரவு தெரிவிக்கக் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு அளிக்கும் வாக்குறுதிகள் நம்பகமானவை அல்ல என்றும், அவற்றை வெற்று உறுதிமொழிகளாகவும் விஷ உருண்டைகளாகவும் கருதி எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக முன்வைக்கும் திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, அதன்படி மசோதா கொண்டுவரப்பட்டால் மட்டுமே அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கி.வீரமணி கூறியுள்ளார். திமுகவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், எந்த தயக்கமும் இன்றி மசோதாவை எதிர்த்து வெளிப்படையாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)