தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஸ்டாலினை சந்திக்கிறார் கார்கே!

தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவு திரட்ட அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக ஏற்கனவே அறிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து மசோதாவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த ஆலோசனையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.ஏ.பேபி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கருத்துகள் (0)