விபத்தில் சிக்கிய பாஜக மாநிலங்களவை எம்.பி. லட்சுமி வர்மா.. ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் காயம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமி வர்மா பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியதில், அவருடன் பயணித்த மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நவம்பர் 27-ம் தேதி பலோடா பசாரிலிருந்து ராய்ப்பூர் நோக்கி லட்சுமி வர்மா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரோரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பங்கோலி அருகே எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் லட்சுமி வர்மா, அவரது கார் ஓட்டுநர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் தனி உதவியாளர் என 4 பேரும் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
காயமடைந்த 4 பேரையும் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




கருத்துகள் (0)