திருப்பரங்குன்றம் பாதுகாப்பை ஏற்ற சிஆர்பிஎஃப்.. கோயில் மற்றும் தர்காவுக்கு பாதுகாப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மலைப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை மத்திய ரிசர்வ் காவல் படையான சிஆர்பிஎஃப் ஏற்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா ஆகிய இரு பகுதிகளிலும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இரு வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




கருத்துகள் (0)