சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கொளத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட ஸ்டாலின் விருப்பமில்லை.. இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு?

கொளத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட ஸ்டாலின் விருப்பமில்லை.. இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு?

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவால் அந்த தொகுதி காலியாகியுள்ள நிலையில், அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கொளத்தூர் தொகுதியில் புதிய வேட்பாளரை நிறுத்துவது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் வகையில் வேட்பாளர் தேர்வு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சியில் உள்ள பல்வேறு நிர்வாகிகள் மற்றும் புதிய முகங்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பில் சென்னை மேயர் பிரியா வேட்பாளராக நிறுத்தப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், புரசைவாக்கம் ரங்கநாதன், சிற்றரசு, எழிலன் நாகநாதன், கார்த்திக் மோகன் உள்ளிட்டோரின் பெயர்களும் வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதனால் கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் புதிய வேட்பாளர் களமிறங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சியின் தலைமை இறுதி முடிவு எடுக்கும் என்றும், மு.க. ஸ்டாலினின் முடிவே இந்த விவகாரத்தில் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை கொளத்தூர் தொகுதியின் வேட்பாளர் யார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.