சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடாவில் 837 வேலைவாய்ப்புகள்.. டிசம்பர் 7 விண்ணப்பிக்க கடைசி நாள்!

பேங்க் ஆப் பரோடாவில் 837 வேலைவாய்ப்புகள்.. டிசம்பர் 7 விண்ணப்பிக்க கடைசி நாள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியின் வெல்த் மேனேஜ்மென்ட் சேவைகள் பிரிவில் 837 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு இந்த அறிவிப்பு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

 

இந்த ஆட்சேர்ப்பில் உதவி துணைத் தலைவர், டெரிட்டரி ஹெட், முதலீட்டு மேலாளர், மூத்த வாடிக்கையாளர் உறவு மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப தொடர்புடைய துறைகளில் பணி அனுபவமும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175-ம், மற்ற பிரிவினருக்கு ரூ.850-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் டிசம்பர் 7-ம் தேதிக்குள் பேங்க் ஆப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bankofbaroda.bank.in/ வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் Careers பிரிவுக்குச் சென்று விண்ணப்ப நடைமுறைகளை நிறைவு செய்ய வேண்டும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.