ரூ.3.22 லட்சம் எல்.ஐ.சி. மோசடி வழக்கு.. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற தபால்காரர் கைது!

சென்னையில் எல்.ஐ.சி. பாலிசியின் முதிர்வுத் தொகையை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த வழக்கில், 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற தபால்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு, பாலிசிதாரர் விஜயகுமாருக்கு வழங்க வேண்டிய ரூ.3.22 லட்சம் முதிர்வுத் தொகையை சிலர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பெற்றுக்கொண்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். மற்றொரு நபரை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மணலியைச் சேர்ந்த ராமமூர்த்தி (64) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் தபால்காரராக பணியாற்றிய ராமமூர்த்தி, தற்போது ஓய்வு பெற்ற நிலையில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த மோசடி வழக்கில் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.




கருத்துகள் (0)